உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ ஒழுங்கு சட்டம் கொண்டு வர கோரிக்கை

மருத்துவ ஒழுங்கு சட்டம் கொண்டு வர கோரிக்கை

புதுச்சேரி: மருத்துவ ஒழுங்கு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.அவர், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு;புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் இல்லை. 30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு தனி ரெஸ்ட் ரூம், தனி கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மூன்று மாதங்களுக்கு முன், கூட அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிந்த ஒரு பயிற்சி மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்டார்.இங்கு இரண்டு காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களுக்கு காவல் துறை சம்பந்தப்பட்ட ஆயுதங்களை வழங்காததால், அவர்களும் பணி பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.தினசரி அவசர சிகிச்சை பிரிவில் உள்ள மருத்துவர்கள் மிரட்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டசபை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த மருத்துவ ஒழுங்கு சட்டத்தை முதல்வர் கொண்டு வரவேண்டும். ஜிப்மர், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரி, உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொது மக்கள் பாதிக்கின்றனர். எனவே, முதல்வர் மக்களின் நலன் கருதி மருத்துவர்களை அழைத்து பேச வேண்டும்.இவ்வாறு அவர், கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை