உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தனியார் மயமாக்கும் கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

மின்சாரம் தனியார் மயமாக்கும் கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் மின்சாரம் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த டில்லியில் நடக்கும் கூட்டத்தை ரத்து செய்ய, பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசு மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் புதுச்சேரியில் மின்சாரம் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த இன்று, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது. இதில் புதுச்சேரி அரசின் சார்பில், நோடல் அதிகாரி மூலம், தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் மீதான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி புதுச்சேரி தலைமை செயலாளர்களுக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசின், 2024--25 வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, மின் வினியோக கட்டமைப்புகள், மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், ரூ.83.14 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் எனவும், ரூ.404.19 கோடி மதிப்பில் தற்போதுள்ள மின் விநியோக கட்டமைப்பை நவீனப்படுத்த, புதுப்பிக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது எனவும் அறிவித்தார். ஆனால் இவற்றை எல்லாம் ஏமாற்றும் வகையில், மத்திய பா.ஜ., அரசு கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தை பா.ஜ., அரசு ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி பா.ஜ., என்.ஆர்.காங்., அரசு இன்றைய கூட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ