| ADDED : மார் 26, 2024 11:46 PM
புதுச்சேரி : 'அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது' என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது:புதுச்சேரி அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து வரும் 30ம் தேதி தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு தவறானது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.இந்த தேர்தல் துளிகூட நேர்மையாக நடப்பதிற்கு வாய்ப்பு இல்லை. சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு, பா.ஜ., வை எதிர்ப்பதாக கூறி பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டினார்.கடந்த முறை தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த முறை தி.மு.க., இடம் பிடித்துள்ள இண்டியா கூட்டணிக்கு நேரு ஆதரவு அளிக்க காரணம் என்ன? நேருவின் ஆதரவை தி.மு.க., அமைப்பாளர் ஏற்றுக் கொள்வாரா என தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.