மேலும் செய்திகள்
போலீஸ் உடல் தகுதி தேர்வு முதல் நாள் 279 பேர் பங்கேற்பு
15 hour(s) ago
லெனின் சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
15 hour(s) ago | 1
போதையில் தகராறு: 2 பேர் கைது
15 hour(s) ago
புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் கரையேற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.கடலில் மீன்வளங்களை பாதுகாத்திட ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கனச்செட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் - புதுகுப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்துார் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம் நாட்டுப் படகுகளை தவிர அனைத்து வகை படகுகள், இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து ஏப்., 15 முதல் புதுச்சேரி, காரைக்காலில் 15 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தடைக்காலம் துவங்கியதும், மீனவர்கள் உடனடியாக விசைப்படகுகளை பழுது பார்க்க துவங்கிவிடுவர். இந்த முறை லோக்சபா தேர்தல் பணிகளில் மீனவர்கள் மூழ்கி இருந்தனர்.கடந்த 19ம் தேதியுடன் ஓட்டுப் பதிவு முடிந்துள்ள சூழ்நிலையில் இப்போது விசைப்படகுகளை சீரமைக்கும் பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.தேங்காய்த்திட்டு துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள், கடற்கரையோரங்களில் விசைப்படகுகளை நிறுத்தியுள்ள மீனவர்களை அவற்றை சீரமைப்பு பணிகளை துவக்கியுள்ளனர். மீன்பிடி தடைகாலத்திற்குள் விசைப்படகுகளில் பழுதடைந்துள்ள பாகங்களை மாற்றுவது, வர்ணம் பூசுவது, வலைகளை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago | 1
15 hour(s) ago