உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராமப்புற சாராயக்கடைகளில் கலால் துறை திடீர் சோதனை

கிராமப்புற சாராயக்கடைகளில் கலால் துறை திடீர் சோதனை

புதுச்சேரி: பாகூர், நெட்டப்பாக்கம் பகுதிகளில் கலால் துறை தனிப் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.தமிழக பகுதியில் சிலர் புதுச்சேரி மதுவை அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகளில் அரசின் வடிசாராய ஆலையின் மூலம் வழங்கப்படும் சாராயம் மட்டுமே விற்கப்படுகிறதா? அதன் வீரியத்தை ஆய்வு செய்யவும், சாராயத்தில் வேறு ஏதேனும் கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க கலால் ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவிட்டார்.தாசில்தார் சிலம்பரசன், ஆய்வாளர் அறிவுச்செல்வன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, நேற்று பாகூர், நெட்டப்பாக்கம் மற்றும் வில்லியனுார் கொம்யூன் பகுதிகளில் உள்ள சாராயக் கடைகளில் கலால் துறை தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். புதுச்சேரி சாராயம் பாக்கெட்டுகள் தமிழக பகுதிக்கு கள்ளத்தனமாக எடுத்துச் செல்லப்படுகிறதா என சோதனை நடத்தினர்.மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தனிநபருக்கு சாராயம் விற்பனை செய்யக்கூடாது என சாராயக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். மீறுவோர் மீது புதுச்சேரி கலால் சட்டத்தின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ