உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா

காங்., அலுவலகத்தில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி, வைசியாள் வீதியில் உள்ள மாநில காங்., அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., நீலகங்காதரன் மற்றும் காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தேசிய கொடி ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து, வைத்திலிங்கம் எம்.பி., காங்., கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி