உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

வீராம்பட்டினம் தேரோட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் தேர் திருவிழாவிற்கு வந்த இரண்டு பெண்களிடம் தாலி செயினை பறித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.வீராம்பட்டினம், செங்கழுநீர் அம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தேரோட்டத்தின் போது, அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், பொதுமக்கள் கூட்டம் அதிமாக காணப்பட்டது. விழாவிற்கு வந்த ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்துறை ஊழியரின் மனைவி ராஜேஸ்வரி அணிந்திருந்த 10 சவரன் தாலி செயின் , தேங்காய்த்திட்டு வசந்த நகர் ராணி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இருவரும் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை