புதுச்சேரி: பொதுப்பணித்துறையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு 278 இளநிலை பொறியாளர், ஓவர்சீயஸ் பணியிடங்கள் நேரடி போட்டி தேர்வு மூலம் நிரப்ப தேர்தல் முடிவுக்கு பிறகு அறிவிப்பு வெளியாக உள்ளது.
வயது தளர்வு தேவை
புதுச்சேரியில் 37 ஆண்டுகளுக்கு பிறகு இளநிலை பொறியாளர், ஓவர்சீயஸ் பணியிடம் நிரப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிவில் முடித்து பல ஆண்டுகளாக அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் 35 வயதை கடந்து விட்டனர். எனவே, பல ஆண்டுகளாக பணியிடம் நிரப்பாத தால், கூடுதலாக 2 முதல் 4 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
பயிற்சி வகுப்புகள்
பொதுப்பணித்துறை பொறியியல் பணியிடத்திற்கான போட்டி தேர்வுகளுக்கு தமிழ கத்தில் காரைக்குடியில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் உள்ளது. தற்போது புதுச்சேரியில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர்கள் சார்பில் பொறியாளர் போட்டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு களும் துவங்கி நடந்து வருகிறது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது முதல் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது. போலீஸில் கான்ஸ்டபிள், ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எல்.டி.சி., யு.டி.சி., பணியிடங்கள் நிரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உதவியாளர் பணி நிரப்புவதிற்காக அறிவிப்பு வெளியானது. தீயணைப்பு துறையில் காலி பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது.பொதுப்பணித்துறையில் கடந்த 1987ம் ஆண்டு கடைசியாக இளநிலை பொறியாளர் பணியிடம் நிரப்பட்டது. அதன்பின்பு இளநிலை பொறியாளர் பணியிடங்கள் 85 சதவீதம் பதவி உயர்வு, 15 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப பணி நியமன விதிகள் திருத்தம் செய்யப்பட்டது.இதனால் காலியான ஜே.இ. இடங்கள் அனைத்தும் பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பட்டு வந்தது. 1987ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர், செயற்பொறியாளர் வரை பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர். இதனால் இளநிலை பொறியாளர் பணியிடங்கள் ஏராளமானது காலியாக கிடந்தது. ஒர்க் இன்ஸ் பெக்டர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இளநிலை பொறியாளர் பணியிடங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அங்கும் ஆட்கள் இல்லை.இதனால் இளநிலை பொறியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் பொறியாளர்களை தேர்வு செய்ய பணி நியமன விதியில் மாற்றம் செய்யப்பட்டது. இளநிலை பொறியாளர் பணியிடம் நிரப்புவதில் 85 சதவீதம் நேரடி நியமனமும், 10 சதவீதம் பதவி உயர்வு, 5 சதவீதம் துறை ரீதியான தேர்வு மூலம் நிரப்புவது என கடந்த நவ. மாதம் அரசாணை வெளியானது.அரசாணையில், 218 இளநிலை பொறியாளர் (ஜே.இ.) பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதனை புதிய நியமன விதிகள்படி நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கல்வி தகுதி டிப்ளமோ அல்லது பொறியியல் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.இதுபோல் பொதுப்பணித்துறை ஓவர்சீயஸ் பணியிடங்கள் 231 காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் பதவி உயர்வு, 40 சதவீதம் நேரடி நியமனமும், 10 சதவீதம் துறை ரீதியான தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்கி நிரப்ப பணி நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட புதிய பணி நியமன 185 இளநிலை பொறியாளர் பணியிடங்களும், 40 சதவீத அடிப்படையில் 93 ஓவர்சீயஸ் பணியிடங்கள் என மொத்தம் 278 இடங்கள் நேரடி போட்டி தேர்வு மூலம் நிரப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின்பு அறிவிக்கப்பட உள்ளது. 37 ஆண்டுகளுக்கு பிறகு பொதுப்பணித்துறையில் நேரடிய நியமனம் மூலம் இளநிலை பொறியாளர், ஓவர்சீயஸ் பணியிடங்கள் நிரப்ப கோப்புகள் தயாராகி வருவதால், சிவில் முடித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயிற்சி வகுப்புகள்
பொதுப்பணித்துறை பொறியியல் பணியிடத்திற்கான போட்டி தேர்வுகளுக்கு தமிழ கத்தில் காரைக்குடியில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் உள்ளது. தற்போது புதுச்சேரியில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர்கள் சார்பில் பொறியாளர் போட்டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு களும் துவங்கி நடந்து வருகிறது.
பயிற்சி வகுப்புகள்
பொதுப்பணித்துறை பொறியியல் பணியிடத்திற்கான போட்டி தேர்வுகளுக்கு தமிழ கத்தில் காரைக்குடியில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் உள்ளது. தற்போது புதுச்சேரியில் ஓய்வு பெற்ற செயற்பொறியாளர்கள் சார்பில் பொறியாளர் போட்டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு களும் துவங்கி நடந்து வருகிறது.