உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் தகுதி பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு

மாணவர்கள் தகுதி பட்டியல் நாளை மறுதினம் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின், தகுதி பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 2024-25ம் கல்வியாண்டில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கைக்கு, நேற்று முன்தினம் அந்தந்த அரசு மேல்நிலைப்பள்ளிகளின் அறிவிப்பு பலகையில், 10ம் வகுப்பில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்பட்டது.அதை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இந்நிலையில், நாளை 27ம் தேதி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு முறையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இடம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாள் முடியும் போதும், மீதமுள்ள இடங்கள் ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில், ஒட்டப்படும். இதையடுத்து, நாளை மறுதினம் 28ம் தேதி 10ம் வகுப்பில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின், தகுதி பட்டியல் நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி