உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டை வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

முத்தியால்பேட்டை வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், பாதாள சாக்கடையில் கழிவுநீர் அடைப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது, பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத பகுதிகளில் உடனடியாக செயல்படுத்துவது, திருவள்ளுவர் நகரில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.மேலும், அதிதி ஓட்டலில் ஆரம்பித்து, சாலை தெரு வரையில் காந்தி வீதியில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பிளாட்பாரம் புதுப்பித்தல், தொகுதி முழுவதும் ஐமாஸ், மினி மாஸ் விளக்குகளை பழுது நீக்குவது, திருவள்ளுவர் நகர் மற்றும் முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் உள்ள பெரிய வாய்க்கால்களை துார் வாரி புதுப்பிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.திறக்கப்பட்டுள்ள விசுவநாதன் நகர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், கடலோர பகுதியில் துாண்டில் முள் வளைவு அமைக்க வேண்டும் என்றும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட கோட்ட பொறியாளர்களுடன் நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உறுதியளித்தார். கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் உமாபதி, சுந்தர்ராஜ், ராதாகிருஷ்ணன், சுப்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ