உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

காரைக்கால்: காரைக்கால் ரயில் நிலையத்தில் டாக்டரின் மொபைல் போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் நிரவி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண் ராதாகிருஷ்ணன், 36; இவர் திருவாரூர் மெடிக்கல் காலேஜ் மருந்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை காரைக்கால் ரயில் நிலையத்தில் தனது நண்பரை அழைத்து செல்ல காத்திருந்தார். அப்போது அவரது மொபைல் போனை பெஞ்சியில் வைத்துள்ளார்.இதனை வாலிபர் ஒருவர் எடுத்துக்கொண்டு தப்பினார். டாக்டர் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர்.பிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜா, 36; எனத் தெரியவந்தது.டாக்டர் அருண் ராதாகிருஷ்ணன் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் புருேஷத்தமன் வழக்குப் பதிந்து ராஜவை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை