உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்

குஜராத்தில் இருந்து தான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு வருகிறது காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் தகவல்

அரியாங்குப்பம்: குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் போதை பொருட்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்படுகிறது என காங்.,வேட்பாளர் குற்றம்சாட்டிள்ளார்.லோக்சபா தேர்தலையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நேற்று ஒட்டு சேகரிப்பின் போது பேசியதாவது:பா.ஜ., ஆட்சி புதுச்சேரியிலும், மத்தியிலும் எப்படி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ., ஆட்சியில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. இந்தியாவில், 3 கோடி வேலை வாய்ப்புகள் நிரப்பாமல் உள்ளது. புதுச்சேரியில், 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பாமல் இருந்து வருகிறது.ஆசிரியர்கள், பொறியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள் சமூகநலத்துறையில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. மாகி, ஏனாமில் போக்குவரத்துத்துறை அலுவலகம் இல்லாமல் இருக்கிறது.மருத்துவமனைகளில், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வேலைகள் இருந்தும் வேலையை தருவதில்லை. காரைக்கால், துறைமுகத்திற்கு அதானி வந்து செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ரூ. 4 ஆயிரம் கோடிக்கு அமைக்கப்பட்டு வருகிறது.குஜராத் துறைமுகத்தில், தினமும் போதை பொருள் பிடிப்பட்டு வருகிறது. அங்கிருந்து தான், புதுச்சேரிக்கு போதை பொருட்கள் வருகிறது. முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போதை பொருட்களை கொடுத்தவர்கள் யார் என தெரிவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை