உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் ஓம்சக்தி சேகர் பேச்சு

மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் ஓம்சக்தி சேகர் பேச்சு

புதுச்சேரி : 'மீண்டும்மோடி பிரதமராக வேண்டும்என்ற ஒற்றை குறிக்கோளோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்' என அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசினார். புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ., கூட்டணி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிள்ளைத்தோட்டம் பகுதியில் ஓட்டு சேகரிப்பு நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார் மற்றும்ரிச்சர்டு ஆகியோர் நேற்று ஏற்பாடு செய்தனர். அதில், அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்திட வேண்டும். மக்கள் முதல்வர் ரங்கசாமியின் சாதனைகள் தொடர வேண்டும். மோடி, 3வது முறையாக பிரதமர் ஆக வேண்டும். இதற்கு, மீண்டும்மோடி பிரதமராக வேண்டும்என்ற ஒற்றை குறிக்கோளோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்பொதுமக்கள் தாமரை சின்னத்தில் ஓட்டு அளித்து, வேட்பாளர் நமச்சிவாயத்தை, வெற்றி பெற செய்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ