மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் பா.ஜ., எம்.எல்.ஏக்களுடன் தி.மு.க.,- காங்., எம்.எல்.ஏ.,க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் செல்வம் பதில் அளித்ததைக் கண்டித்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 2ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது.விவாதத்தில் பேசிய காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன்: புதுச்சேரி வளர்ச்சியடையவில்லை. காமராஜர் கல்வி நிதியுதவி மாணவர்களுக்கு தரவில்லை. கடன் தள்ளுபடி செய்யவில்லை. மத்திய அரசு நிதியை குறைவாக கொடுத்துள்ளது.அமைச்சர் நமச்சிவாயம்: அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். மாணவர்களுக்கு அரசு பணம் வழங்கி வருகின்றது. வைத்தியநாதன் (காங்.,): புதுச்சேரி மாநில அந்தஸ்து பற்றி பட்ஜெட்டில் ஒன்றுமே குறிப்பிடவில்லை. கவர்னர் உரையிலும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் உங்களது கூட்டணி ஆட்சி தான் நடக்கின்றது. பிறகு ஏன் மாநில அந்தஸ்து பற்றி குறிப்பிடவில்லை. கூட்டணி அரசு இருந்தும் புதுச்சேரி அரசு வஞ்சிக்கப்படுகிறது. சபாநாயகர் செல்வம்: மாநில அந்தஸ்துக்காக,12 முறை காங்கிரஸ் அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது ஏன் வாங்கி தரவில்லை. அப்போது மத்தியில் காங்., அரசு இருந்தது. பிரதமர் அலுவலக அமைச்சராக முந்தைய முதல்வர் இருந்தார். தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு, கடந்தமுறை மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். முடியாது என திருப்பி அனுப்பினர்.அமைச்சர் நமச்சிவாயம்: மாநில அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதனை மாற்ற வலியுறுத்துவோம்.தொடர்ந்து மாநில அந்தஸ்து தொடர்பாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் செல்வம் பதில் அளித்து கொண்டு இருந்தார்.அப்போது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் - தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் பேசியதாதல் சபையில் கடும் அமளி ஏற்பட்டது, அப்போது, எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சபாநாயகர் அனைவருக்குமானவர். ஆனால் அவர் பா.ஜ.,வுக்கு ஆதரவாக பேசுகிறார். நடுநிலையான சபாநாயகராக பேசவில்லை. எனவே சபா நாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து தி.மு.க., காங்., எம்.எல். ஏ.,க்கள் சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago