| ADDED : மே 22, 2024 06:57 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பல இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.புதுச்சேரியில் பல இடங்களில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. தெருவில் விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் பொதுமக்களை நாய்கள் கடித்து துன்புறுத்தி வருகின்றன. அதனால், மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.மக்களின் நலன் கருதி, தெரு நாய்களை நகராட்சியினர் பிடித்து, கருத்தடை மேற்கொள்ள வேண்டும் என சட்டக் கல்லுாரி மாணவர்கள் நகராட்சி ஆணையர், தாசில்தாரிடம் நேற்று புகார் மனு கொடுத்துள்ளனர்.