உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி - காரைக்காலுக்கு சிறப்பு பஸ்கள்

புதுச்சேரி - காரைக்காலுக்கு சிறப்பு பஸ்கள்

புதுச்சேரி : லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இன்று சிறப்பு பஸ்களை பி.ஆர்.டி.சி., இயக்குகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் நாளை (19ம் தேதி) ஓட்டுப் பதிவு நடக்கிறது. புதுச்சேரியில் வசிக்கும் காரைக்காலை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு சென்று ஓட்டளிப்பதற்கு வசதியாக, இன்று மட்டும் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு 4 சிறப்பு பி.ஆர்.டி.சி., பஸ்க்ள இயக்கப்படுகிறது.மேலும்,காரைக்கால் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், ஐ.டி.,ஊழியர்களின் வசதிக்காககாரைக்காலில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே2புதிய பஸ்கள் இயக்கப்படும் நிலையில், இன்று முதல்,காரைக்காலில் இருந்து சென்னை வரை, 2+2 இருக்கைகளுடன் கூடிய 4 புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது.இதில்,பைபாஸ்வழியாக இரண்டு பஸ்களும், இ.சி.ஆர்., வழியாக இரண்டு பஸ்களும் இயக்கப்படுகிறது.மேலும்,புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னைக்கு நான்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது, புதுச்சேரி - சென்னை வழித்தடத்தில்இ.சி.ஆரில், 11, பைபாசில் 2என்ற 13 புதியபஸ்களும்,காரைக்கால் - சென்னை வழித்தடத்தில் 6 புதிய பஸ்களும்இயக்கப்படுகிறது.வரும் 25ம் தேதி முதல்,புதுச்சேரி - காரைக்கால் வழித்தடத்தில் புதிதாக இரண்டுசொகுசுபஸ்களும், புதுச்சேரி - நாகர்கோவில்,புதுச்சேரி - குமுளி வழித்தடத்தில் 2+2 இருக்கைகளுடன் கூடியதலாஇரண்டு புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை