உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுப்பதிவு மையத்தில் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

ஓட்டுப்பதிவு மையத்தில் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

திருக்கனுார், : காட்டேரிக்குப்பம் ஓட்டுச்சாவடி மையங்களை போலீஸ் எஸ்.பி., வம்சித ரெட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். புதுச்சேரி லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. இதையொட்டி, மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பம் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஓட்டுச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி., வம்சித ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும். ஓட்டுச்சாவடி மையம் அருகே ஓட்டு கேட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசன், லுார்துநாதன், ஜானகிராமன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை