உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை பள்ளி கல்வித் துறை திடீர் எச்சரிக்கை

பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை பள்ளி கல்வித் துறை திடீர் எச்சரிக்கை

புதுச்சேரி: துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித் துறை திடீர் எச்சரிக்கை விட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி நேற்று அனுப்பியுள்ள எச்சரிக்கை சுற்றிக்கை: கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 இன் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டும். துவக்க நிலையில் என்.சி.இ.ஆர்.டி.,அல்லது மாநில பாடத்திட்டமாக எஸ்.சி.இ.ஆர்.டி.,பரிந்துரைத்த புத்தகங்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்.மாணவர்கள் கொண்டு செல்லும் பள்ளிப் பைகளின் எடை குறைவாக இருத்தல் வேண்டும்.என்.சி.இ.ஆர்.டி., அல்லது மாநில பாடத்திட்டமான எஸ்.சி.இ.ஆர்.டி., யால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களை எடுத்துச் செல்வதற்காக எந்த ஒரு பள்ளியால் எந்த ஒரு குழந்தையும் பாகுபாடு காட்டக்கூடாது. துன்புறுத்தப்படக்கூடாது அல்லது புறக்கணிக்கப்படக்கூடாது.இதனால் மனம் அல்லது உடல் ரீதியான துன்பம் ஏற்படும். அப்படி செய்தால் சிறார் நீதிச் சட்டம், 2015 இன் விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து தனியார் பள்ளிகளும் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், இந்த அறிவிப்பினை அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்களின் பார்வைக்கு தெரியும்படி வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை