உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் எண் திடீர் வாபஸ்

புகார் எண் திடீர் வாபஸ்

புதுச்சேரி: சட்ட விரோத விளம்பர பதாகைகளுக்கு எதிராக புகார் அளிக்க வைக்கப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் உதவி எண், நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது என, வடக்கு சப் கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட செய்திக்குறிப்பு:சட்ட விரோத பதாகைகள், விளம்பர பலகைகளுக்கு எதிரான புகார்களுக்கான 'வாட்ஸ் ஆப்' உதவி எண் திரும்ப பெறப்படுகிறது.பொது இடங்களில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளுக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்க வைக்கப்பட்டிருந்த, வாட்ஸ் ஆப் உதவி எண் (9443383418) நிர்வாக காரணங்களுக்காக திரும்ப பெறப்படுகிறது.பொதுமக்கள் இனி இந்த எண்ணுக்கு புகார் அனுப்ப வேண்டாம். பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை சமர்ப்பிப்பதற்கான, மற்ற அனைத்து வழிகளும் வழக்கம் போல செயல்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை