| ADDED : ஜூன் 29, 2024 06:21 AM
புதுச்சேரி : அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.இதுகுறித்து, அரசு ஆண்கள் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகம் சார்பில், ஆண்டு தோறும் மாணவர்களுக்கு ஐ.டி.ஐ., மூலம் பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நாளை 30ம் தேதியுடன் முடிவடைகிறது.பயிற்சியில் சேர மாணவர்கள், https://centacpuducherry.inஅல்லது https://labour.py.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.