உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த பயிற்சி முகாம்

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் மண்வளம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.சுத்துக்கேணி உழவர் உதவியகத்தில் நடந்த முகாமிற்கு மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் சாந்தி முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் வெங்கடாசலம் வரவேற்றார்.பயிற்சி முகாமில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய மண்வள நிபுணர் பிரபு கலந்து கொண்டு மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் பரிசோதனை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.இதில், கொடாத்துார், சுத்துக்கேணி, கைக்கிளப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார மேலாளர் குமரன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கண்ணாயிரம், களப்பணியாளர்கள் ஏழுமலை, ஆதிநாராயணன், நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி