உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக தொழில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

உலக தொழில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

புதுச்சேரி: தவளகுப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் தொழில் முனைவோர் பிரிவு சார்பில், உலக தொழில் திறன் மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.உலக தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி துணை முதல்வர் (பொ) ஹென்னா மோனிஷா தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் பாலாஜி வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக சென்னை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதி அலுவலக இணை இயக்குனர் ரவிக்குமார், புதுச்சேரி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நுட்பத்தின் துணை பொது மேலாளர் அமீட் நயின் ஆகியோர் கருத்தரங்கை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவி ரோஷினி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லுாரி தொழில் முனைவோர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர். கணினி துறை இரண்டாமாண்டு மாணவர் இன்பா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ