மேலும் செய்திகள்
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
19 hour(s) ago
வாலிபர்கள் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு பதிவு
19 hour(s) ago
புதுச்சேரி : ஜிப்மரின் அவசர சிகிச்சை பிரிவு, வரும் 6 ம் தேதி முதல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இணைப்பு கட்டடத்தில் மாற்றப்படுகிறது.ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதில், புதுச்சேரி சுற்றி யுள்ள பகுதியில் நடக்கும் விபத்து மற்றும் அவரச சிகிச்சை தேவைப்படுவோர், ஜிப்மரின் நுழைவு வாயில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வந்தது.இங்கு, தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளதால், தற்காலிகமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு இணைப்பு கட்டடத்தில் அவசர சிகிச்சை பிரிவு இயங்க உள்ளது.ஜிப்மர் மருத்துவ இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவசர கால சிகிச்சை பிரிவு கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கும் பணிகளை ஜிப்மர் மேற்கொள்ள உள்ளது. இப்பணிக்களை முடிக்க சுமார் 4 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கால கட்டடத்தில் ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் (எஸ்.எஸ்.பி.) இணைப்பு கட்டிடத்தில் நாளை மறுநாள் 6ம் தேதி முதல் தடையற்ற அவசர கால சேவைகளை ஜிப்மர் தொடர்ந்து வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago