| ADDED : டிச 08, 2025 04:55 AM
புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடியை சேர்ந்த பெண், தனியார் வங்கியில் புதிதாக ஏ.டி.எம்., கார்டு பெற விண்ணப்பித்திருந்தார். வீட்டிற்கு வந்த ஏ.டி.எம்., கார்டை செயல்படு த்த முயன்றார். அவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர் வாட்ஸ் ஆப்பில் வரும் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்தால், ஏ.டி.எம்., கார்டு செயல்படும் என, கூறியுள்ளார். அதை நம்பிய அப்பெ ண், வாட்ஸ் ஆப்பில் வந்த மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து , தனது வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இதேபோல், அரியூர் பெண் 20 ஆயிரத்து 500, அய்யங்குட்டிப்பாளையம் நபர் 25 ஆயிரம், ரெட்டியார்பாளையம் நபர் 35 ஆயிரத்து 620, முத்தியால்பேட்டை நபர் 20 ஆயிரம், புதுச்சேரி நபர் 25 ஆயிரம், புதுச்சேரி பெண்கள் இருவர் 19 ஆயிரம் மற்றும் 90 ஆயிரம் என, 8 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ.12 லட்சத்து 85 ஆயிரத்து 120 இழந்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.