உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்

ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் நேரில் ஆறுதல்

புதுச்சேரி: சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இரங்கல் தெரிவித்தார்.புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்படி, உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் நேற்று நேரில் சென்று பெற்றோரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எதிர்பாராத மரணத்திற்கு வழங்கப்படும் ரூ. 10 லட்சம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விரைவாக நிதி உதவி பெற உரிய ஆவணங்களை பெற்றுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை