உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அருண் சர்மா தொண்டு நிறுவனம் பொங்கல் போட்டி பரிசளிப்பு விழா

அருண் சர்மா தொண்டு நிறுவனம் பொங்கல் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் அருண் சர்மா தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.புதுச்சேரி உழவர்கரை தொகுதியில்,அருண் சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முத்துப்பிள்ளை பாளையம் மக்களுக்கு ரொக்கப் பணம், பரிசு, பொன்னி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.தொடர்ந்து, உழவர்கரை தொகுதி ஜே.ஜே. நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த பல்வேறுபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ரெட்டியார் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது.விழாவிற்கு, அருண் சர்மா சாரிடபுள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் பிரபாதேவி வீரராகு தலைமை தாங்கினார். உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர், அருண் சர்மா சாரிடபுள் டிரஸ்ட் நிறுவனர் ஐ.ஜி.வீரராகு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.இதில் முதல் பரிசாக 4 பேருக்கு கிரைண்டர், 2ம் பரிசாக 4 பேருக்கு மிக்சி, 3ம் பரிசாக 4 பேருக்கு மின் அடுப்பு மற்றும் 40 பேருக்கு சிறப்பு பரிசுகளும், 48 பேருக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.விழாவில், சிவசங்கர் எம்.எல்.ஏ., பேசுகையில், ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து, ஏழை மக்களுக்கும், தொகுதி மக்களுக்கும் நிச்சயமாக அவர் களப்பணி ஆற்றுவார். எனக்கு முன்பே ஐ.ஜி.வீரராகு தொகுதி மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். நிச்சயமாக பிரபாதேவி வீரராகு வரும் காலத்தில் எம்.எல்.ஏ.,வாகஆவார் என்றார்.விழாவில், தொகுதி பொதுமக்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி