உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செஸ் போட்டி: புதுச்சேரி மாணவருக்கு தங்கம்

செஸ் போட்டி: புதுச்சேரி மாணவருக்கு தங்கம்

புதுச்சேரி: மலேசிய காமன்வெல்த் செஸ் போட்டியில் புதுச்சேரி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார்.காமன்வெல்த் சதுரங்க போட்டி மலேசியா நாட்டின் பாரம்பரிய நகரமான மெலகாவில் கடந்த 19 ம்தேதி துவங்கியது.இதில் 8 வயது,10,12,14,14,18 வயதிற்குட்பட்ட பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் புதுச்சேரி மாணவர் ராகுல் ராமகிருஷ்ணன் இந்தியா சார்பில் பங்கேற்றார்.மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த செஸ்போட்டியில் தோல்வியே காணாமல் அனைத்து போட்டிகளிலும் வென்று தங்க பதக்கம் வென்றார்.இதேபோல் பிலிட்ஸ் 10 வயதிற்குட்பட்ட பிரிவிலும் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை