உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொகுதி வளர்ச்சி பணிகள் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

தொகுதி வளர்ச்சி பணிகள் எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை

புதுச்சேரி: தொகுதியில் வில்லியனுார் கொம்யூன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடந்தது.அவரது அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், வில்லியனுார் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள சாலை, வாய்க்கால், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதமாக முடிக்க, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.வில்லியனுார் கொம்யூன் ஆணையர் எழில்ராஜ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்ய நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை