| ADDED : ஆக 21, 2024 04:56 AM
வில்லியனுார் : சேதராப்பட்டில் அரசு கிளை கால்நடை இன அபிவிருத்தி மையம் கட்டுமான பணியை அமைச்சர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.ஊசுடு தொகுதி, சேதராப்பட்டில் புதுச்சேரி கால்நடைத்துறை பராமரிப்பில் இயங்கி வந்த கிளை கால்நடை இன அபிவிருத்தி மைய கட்டடம், புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், ரூ. 9:30 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கால்நடை துறை இயக்குனர் லதாமங்கேஸ்வர், துணை இயக்குனர் செந்தில்குமார், வில்லியனுார் கால்நடைத்துறை டாக்டர் ஆனந்தராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் தனசேகரன், இளநிலைப் பொறியாளர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர்.