உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கும்பாபிஷேகத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

கும்பாபிஷேகத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கல்

புதுச்சேரி: உருளையன்பேட்டை முத்தாலம்மன் கோவில், கும்பாபிஷேகத்திற்கு தி.மு.க., சார்பில், 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. உருளையன்பேட்டை தொகுதி அருந்ததி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக, 1 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்த நன்கொடையை, அமைச்சர் சாய் சரவணன் குமார் முன்னிலையில், கோவில் நிர்வாகிகள் சண்முகம் மற்றும் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டனர். இந்தநிகழ்வில், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் கண்ணதாசன், கிளை துணை செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட பல்வேறு தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !