உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் நகர பகுதியில் ஏராளமான இடத்தில் பேனர் 

புதுச்சேரியில் மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம் நகர பகுதியில் ஏராளமான இடத்தில் பேனர் 

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்களுக்கு ஆபத்தான முறையில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் தடையை மீறி நகரம், கிராமம் முழுதும் பேனர்கள் வைக்கப்படுகிறது.காது குத்துதல், திருமணம், கடை திறப்பு என அனைத்திற்கும் பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து விட்டது. இதனை கவனித்த புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், சென்னை உயர்நீதிமன்றம் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்ட ஆணையை சுட்டி காட்டி, கலெக்டர், தலைமை செயலர் உள்ளிட்ட கடிதம் எழுதினார்.அதில், புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர், கட்அவுட், ஹோர்டிங், பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.இதைத் தொடர்ந்து, நகர பகுதியில் சிக்னல்களில் இருந்த பேனர்களை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். மேலும், பொதுப்பணித்துறையின் நெடுஞ்சாலை மற்றும் மத்திய கோட்டத்தின் கீழ் வரும் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களும் அகற்றப்பட்டது.ஆனால் தற்போது மீண்டும் நகர பகுதிமுழுதும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. அண்ணா சாலை, அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையம் துவங்கி மணிக்கூண்டு வரையிலும், கருவடிக்குப்பம் சிவாஜி சிலை, வழுதாவூர் சாலை கதிர்காமம் பகுதியிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.இதுதவிர, சிலர் சாலையில் வரிசையாக டிரில்லரால் துளையிட்டு இரும்பு கம்பியுடன் கூடிய கட்சி கொடியை நட்டு செல்கின்றனர். இந்த இரும்பு கம்பி கட்சி கொடி சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்தாலும், சாய்ந்தாலும் வாகனம் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை, கட்சி கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !