உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உள்விளையாட்டு அரங்கில் மதில் சுவர் பணி துவக்கம்

உள்விளையாட்டு அரங்கில் மதில் சுவர் பணி துவக்கம்

பாகூர் : பாகூரில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் 43 லட்சம் ரூபாய் செலவில், மதில் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடப் பிரிவு உதவி பொறியாளர் விக்டோரியா, கல்வித்துறை விளையாட்டு மற்றும் இளைஞர் நல திட்ட பொறுப்பாளர் ஆனந்தன், இளநிலை பொறியாளர் ஜெயமாறன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பச்சை நிற வேட்டியுடன்

செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளில் வெள்ளை நிறத்தில் வேட்டி, சட்டை அணிந்து வருவது வழக்கம். அவர், நேற்று பச்சை நிற வேட்டியுடன் வந்தார். இது குறித்து அவரிடம் கேட்டற்கு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான், பச்சை நிற வேட்டி அணிந்து வந்தேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை