| ADDED : மார் 10, 2024 06:19 AM
புதுச்சேரி, : போதை பொருள் எதிர்ப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ராஜ்நிவாசில் நேற்று நடந்தது.கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். நடிகர்கள் ஆர்த்தி, கணேஷ், இசை அமைப்பாளர் சத்யா, நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ்கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழாவில் கவர்னர் பேசும்போது, 'அரசு கடத்தலை, பதுக்கலை தடுக்கலாம். ஆனால் தனி மனித போதை பழக்கத்தை தடுக்க முடியாது. அதனால்தான் இளைஞர்களிடம் சொல்கிறோம்.இன்றிலிருந்து கவர்னர் மாளிகையில் 7339555225 என்ற வாட்ஸ் ஆப் எண் தரப்படுகிறது. போதைத் தடுப்பு சம்பந்தமாக எந்த தகவலாக இருந்தாலும் தெரியப்படுத்தலாம். இது, கவர்னர் மாளிகை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும்.போதை பொருள் பற்றிய தகவல்கள் சந்தேகங்கள் இருந்தால் இந்த எண்ணில் சொல்லலாம். தகவல் அனுப்பலாம். என்னுடைய அதிகாரிகள் அதற்கு பதில் தருவார்கள். இது மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு எண்' என்றார்.