உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி

திருக்கனுார் : குமாரப்பாளையம் ஐயனார் குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் , இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெள்ளிக்கண்ணு, 80; கூலி தொழிலாளி.இவர் கடந்த 12ம் தேதி தனது வீட்டில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்நிலையில், வெள்ளிக்கண்ணு நேற்று முன்தினம் குமாரப்பாளையம் ஐயனார் குளத்தில் இறந்து கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் வெள்ளிக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை