உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு

 புதுச்சேரி: தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு புதுச்சேரியில் இரண்டு மையங்களில் நடந்தது.  மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம், ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு மற்றும் கடற்படை அகாடமி தேர்வு, புதுச்சேரியில் இரு இடங்களில் நேற்று நடந்தது. அதன்படி, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, முதல் அமர்வு காலையிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வு தேர்வு மதியம் முதல் மாலை வரை நடந்தது. அதே போல், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு, லாஸ்பேட்டையில் உள்ள வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  அதில் முதல் அமர்வு தேர்வு காலையிலும், இரண்டாம் அமர்வு தேர்வு மதியத்திலும் நடந்தது. தேர்வு எழுத வந்தவர்கள், இ–அட்மிட் கார்டு சரிபார்த்த பின், அனுமதிக்கப்பட்டனர். மொபைல் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கிறதா என சோதனை செய்த பின் தேர்வுகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டு தேர்வுகளை எழுத மொத்தம், 397 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 241 பேர் தேர்வை எழுதினர். 166 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இரண்டு தேர்வு மையங்களுக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வர்களுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை