மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி: கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி.,பொறியியல் கல்லுாரியில் தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவர் கனிமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் மெடில்டா கருத்துரை வழங்கினார்.கல்லுாரி முதல்வர் மகேந்திரன் பேசுகையில், 'இந்த உலகில் இன்னும் சமத்துவமின்மை உள்ளதால் பெண்கள் தமது கல்விக்கும், வேலை செய்வதற்கும், திருமணத்திற்கும் போராட வேண்டிய நிலை சில இடங்களில் தொடர்கிறது. போராட்டங்களை சந்திக்கும் பெண்கள் மகிழ்ச்சியோடு இந்நாளைக் கொண்டாடும் தருணம் விரைவில் வரும்' என்றார்.விழாவையொட்டி முகத்தில் ஓவியம் வரைதல், பாட்டுப் போட்டி, யோசனை போட்டி, குப்பையில் புதையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.முனைவர் ஜெபாஸ்டின் சோனியா ஜாஸ் நன்றி கூறினார்.
17 hour(s) ago
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago