உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி பஸ் மோதி முதியவர் பலி

பள்ளி பஸ் மோதி முதியவர் பலி

பாகூர்,: தனியார் பஸ் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்தவர் செல்வராசு 69; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில், மடுகரையில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். பின் அங்குள்ள சிவன் கோவில் வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, அவர் அணிருந்திருந்த செருப்பு அறுந்து கொண்டதால், அவர் சாலையோரமாக அமர்ந்து அதனை சரி செய்ய முயன்றார். அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.இதில், தலை நசுங்கி செல்வராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை