| ADDED : ஜன 01, 2024 05:52 AM
புதுச்சேரி : அகில பாரதி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.குயவர்பாளையம் லெனின் வீதியில் நடந்த முகாமிற்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.முகாமில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி பேசியதாவது:இன்றைய உலகம் இணையமாகிவிட்டது. இணையம் வழியாக தகவல்களை தேடும்போது, நம்முடைய அனைத்து தகவல்களும் கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் என்ன தேடுகிறீர்களோ, அது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.எனவே இணைய வழியை மகளிர் உபயோகப்படுத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புகைப்படங்களை இணையத்தில் பகிரக்கூடாது. தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுக்கு பகிர்வதாலும் பெரிய பிரச்னைகள் உண்டாகிறது. படங்களை திருடும் கும்பல் மார்பிங் செய்து, மிரட்டுகின்றனர்.இணைய வழியில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி அதில் பொருட்களை வாங்கினால் கட்டாயம் ஏமாற்றப்படுவீர்கள்.இணைய வழியாக பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு வங்கியும் பின் நம்பரையோ அல்லது ஓ.டி.பி., எண்ணையோ கேட்க மாட்டார்கள். முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வருகின்ற வீடியோக்களை எடுக்க கூடாது' என்றார்.தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.