உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

பாகூர்: கன்னியக்கோவிலில் சாலையோரம் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார், முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயக்குமார், 54; திருமணமாகாதவர். பெற்றோர் இறந்த நிலையில், ஆதரவற்ற அவர் புதுச்சேரி எல்லை பகுதியான கன்னியக்கோவிலில் பழைய பொருட்களை சேகரித்து விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் அங்கேயே தங்கி ஜீவனம் செய்து வந்தார்.நேற்று காலை 10:00 மணியளவில் கன்னியக்கோவிலில் உள்ள பொது சேவை மையம் அருகே உதயக்குமார் இறந்து கிடந்தார்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உதயக்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்து அவரது உறவினர் கடலுார், மஞ்சக்குப்பம் வேலு 52; என்பவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை