உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை, இலக்கிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

கலை, இலக்கிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி: கலை இலக்கிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடந்தது.இப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ஹன்னா மோனிஷா தலைமை தாங்கினார்.தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் செந்தமிழ்க்கோ வரவேற்றார்.விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலத் துறை இயக்குனர் பிரபாவதி,பா.ஜ.,மகளிர் அணி தலைவி ஜெயந்தி சர்மா, கோல ஓவியர் மாலதி செல்வம்,மகளிர் காவலர் ஹேமமாலினி,இளம் தொழில் முனைவோர் விஜயலட்சுமி,வணிகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி மம்தா பெகாரே ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கல்லுாரியில் பணியாற்றும் துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கல்லுாரி தொழில் முனைவோர் பிரிவு,மகளிர் தின விழா குழு செய்திருந்தது.வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்