உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்., போட்டி? தொண்டர்கள் வலியுறுத்தலால் பரபரப்பு

புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்., போட்டி? தொண்டர்கள் வலியுறுத்தலால் பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி தொகுதியில் என்.ஆர். காங்., கட்சி போட்டியிட வேண்டும் என, அக்கட்சியின் தொண்டர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.என்.ஆர். காங்., கட்சி துவக்கப்பட்டு 13 ஆண்டுகள் நிறைவடைந்து, 14வது ஆண்டு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்தும், லோக்சபா தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிப்பதற்காக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.நுாறு அடி சாலையில் அமைந்துள்ள என்.ஆர். காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். என்.ஆர்., காங்., கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கட்சியின் சீனியர் தலைவர் வக்கீல் பக்தவச்சலம் பேசும்போது, 'நமது கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜ., போட்டியிட உள்ளதாக செய்திகள் வருகிறது. புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்., கட்சிக்கு கேட்டு பெறக் கூடாதா?' என கேள்வி எழுப்பினார். மற்ற நிர்வாகிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இருந்தபோதும் கூட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்கள், லோக்சபா தேர்தலில் என்.ஆர். காங்., போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக முதல்வர் ரங்கசாமி பதில் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்தார்.பின், ரங்கசாமி பேசும்போது, 'ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்தும், மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும் பேசுங்கள். கட்சி வளர்ச்சி தொடர்பாகவும் பேசலாம்' என தெரிவித்தார்.தொடர்ந்து, 'கட்சியினருக்கு நிறைய செய்ய வேண்டும் என்றும், கட்சி அமைப்பு, நிர்வாகிகள் தொடர்பாக ஆண்டு விழாவில் பேசலாம் என கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை