உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பதிவுத்துறை மென்பொருள் அமைப்புகள் தேசிய தரவு மையத்திற்கு மாற்றும் பணி துவக்கம்

புதுச்சேரி பதிவுத்துறை மென்பொருள் அமைப்புகள் தேசிய தரவு மையத்திற்கு மாற்றும் பணி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தரவு மையத்தில் இருந்து மென்பொருள் அமைப்புகளை புவனேஸ்வரில் உள்ள தேசிய தரவு மையத்திற்கு மாற்றும் பணி துவங்கப்பட்டுள்ளதாக, பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பதிவுத்துறை சார்ந்த செயல்முறைகளை கணினி மயமாக்குவதிலும், இணையதளம் மூலமாக பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதிலும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது புதுச்சேரி பதிவுத் துறையில் ஆவணப்பதிவு, திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ் வழங்குதல், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பிற சேவைகளுக்கான மென்பொருள்கள்தற்போது புதுச்சேரி மாநில தரவு மையம் மூலம் இயங்கி வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மென்பொருள் அமைப்புகள், 'கிளவுட் சர்வர்' எனும் மேக கணினி மையமான, புவனேஸ்வரில் உள்ள தேசிய தரவு மையத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.இந்த பணியில் புதுச்சேரி பதிவுத்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள தேசிய தரவு மையத்திற்கு மென்பொருள் அமைப்புகளை மாற்றும் பணியை, வருவாய்துறை செயலர் வல்லவன், துவக்கி வைத்தார். கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட பதிவாளர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். மேலும், படிப்படியாக மற்ற மென்பொருள் அமைப்புகளும், மாற்றப்பட்ட உடன், எந்த நேரத்திலும் சேவைகளை விரைவாக பெற முடியும் மற்றும் எந்த வகையான தரவு இழப்பும் தவிர்க்கப்படும்.இதற்கான பராமரிப்பு செலவாக ஆண்டிற்கு, ரூ.15 லட்சம் ஆகும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை