உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிங்கப்பூரில் வேலை என கூறி ரூ.1 லட்சம் மோசடி

 சிங்கப்பூரில் வேலை என கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் சைபர் மோசடி கும்பல் ரூ. 1.89 லட்சம் ஏமாற்றி உள்ளது. கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர், வாட்ஸ் ஆப்பில் வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர், சிங்கப்பூரில் வேலை இருப்பதாகவும், அந்த வேலைக்கு விசா மற்றும் விமான டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டுமென கூறினார். அதனை நம்பிய கருவடிக்குப்பம் நபர், மர்ம நபருக்கு ரூ.1.17 லட்சத்தை அனுப்பினார். அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல், கரியமாணிக்கத்தை சேர்ந்தவர், ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், லாட்டரியில் ரூ. 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும், பரிசு தொகையை பெற செயலாக்க கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த கூறினார். அதனை நம்பி, 56 ஆயிரத்து 299 ரூபாய் மர்மநபருக்கு அனுப்பி ஏமாந்துள்ளார். அரியாங்குப்பத்தை சேர்ந்த பெண், இன்ஸ்டாகிராம் மூலம் துணி ஆர்டர் செய்து 11 ஆயிரத்து 670, புதுச்சேரி, ஆனந்தம் நகரை சேர்ந்த பெண் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து 4,500 என, மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 469 ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி