உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை’

‘டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை’

புதுச்சேரி: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அரசு தனி கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், கூறியதாவது: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 9 பேர் இறந்துள்ளனர். 15,933 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால், தமிழகத்தை ஓட்டியுள்ள புதுச்சேரி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தனி கவனம் செலுத்தி, உடனடியாக போர்க்கால அடிப்படையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ