உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளம்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

பிளம்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

புதுச்சேரி: முன்விரோத தகராறில் பிளம்பரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 23; பிளம்பர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ், 23. இவருக்கும் ஜெயபிரகாஷ் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் கண்டாக்டர் தோட்டம் சாலையில், ஜெயபிரகாஷ், சந்துரு ஆகியோர் பேசி கொண்டிருந்தனர்.அந்த வழியாக வந்த ஆண்ட்ரூஸ், அவரது நண்பர்கள் பிரான்சிஸ், லோகு, பிரகாஷ் ஆகியோர் ஜெயபிரகாஷிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த ஆண்ட்ரூஸ் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால், ஜெயபிரகாஷின் தலையில் அடித்தார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து ஆண்ட்ரூைஸ் கைது செய்தனர். மேலும் பிரான்சிஸ் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி