உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி--டில்லி ரயில் இன்று மாலை புறப்படும்

புதுச்சேரி--டில்லி ரயில் இன்று மாலை புறப்படும்

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு இன்று காலை புறப்பட வேண்டிய அதி விரைவு ரயில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக மாலையில் புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு வாரந்தோறும், புதன் கிழமையன்று அதி விரைவு ரயில் (எண்:22403) காலை 9:55 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, டில்லியில் இருந்து, புதுச்சேரிக்கு வர வேண்டிய இணைப்பு ரயில் பனி மூட்டம் காரணமாக புதுச்சேரிக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அதனால், இன்று காலை வழக்கம் போல, 9:55 மணிக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரயில், மாலை 4;35 மணிக்கு புறப்பட உள்ளது. அதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயணத்தை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை