உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரம்பரிய உணவு திருவிழா

பாரம்பரிய உணவு திருவிழா

புதுச்சேரி, : புதுச்சேரி புனித அன்னாள் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில், சமுதாய நலப்பணித்திட்டம் சார்பில், பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. தாளாளர் ரொசாரியோ மற்றும் உதவி தாளாளர் ஆரோன் தலைமை தாங்கினர். தலைமை ஆசிரியர் வின்சென்ட் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக, அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்று, உணவு திருவிழாவை துவக்கி வைத்து பார்வையிட்டார்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ்குமார், சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். வக்கீல் மரி அன்னா தயாவதி, ஆசிரியை அன்ன மரி வாழ்த்துரை வழங்கினர். பாரம்பரிய உணவு குறித்து ஆசிரியர் அகஸ்ட்டின் தொகுப்புரை வழங்கினார்.நடுவர்களாக ஆசிரியைகள் லுார்து கலாராணி மற்றும் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியர் விக்டோரியன் விஜய்பாபு நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, ஆசிரியர் ஜோசப் லதீஸ் மற்றும் சமுதாய நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை