| ADDED : பிப் 14, 2024 03:30 AM
புதுச்சேரி : அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க ஊழியர்களை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. நேற்று காலை புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் பெற, புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திற்குள் ஏராளமான பெண்கள் வந்தனர். அவர்களை அலுவலக ஊழியர்கள் வெளியேறும்படி கூறினர். ஆத்திரமடைந்த பெண்கள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, நலச்சங்க அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.பெரியக்கடை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வீட்டு வேலை செய்வோர், தையல் தொழிலாளர்களுக்கு உறுப்பினர் விண்ணப்ப படிவம் வழங்க மறுப்பதாகவும், தாலி செயின், கம்பல் அணிந்திருந்த பெண்களை, நீங்கள் வீட்டு வேலை செய்கிறீர்களா என கேலி செய்தாக புகார் தெரிவித்தனர்.போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து, அனை வருக்கும் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப் பத்தை பெற்ற பெண்கள் பூர்த்தி செய்து அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.