உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் திருக்கனுாரில் பாதயாத்திரை

 வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் திருக்கனுாரில் பாதயாத்திரை

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுாரில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற பாதயாத்திரை நேற்று நடந்தது. பாதயாத்திரையை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். இதில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், புதுச்சேரி மை பாரத் ஒருங்கிணைப்பாளர் காயத்ரி உள்ளிட்ட 500க்கும் இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் தேசிய கொடியை ஏந்தியபடி சென்று, சர்தார் வல்லபாய் பட்டேலின் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் மை பாரத் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை