உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ., வழங்கல்

நலத்திட்ட உதவிகள்: எம்.எல்.ஏ., வழங்கல்

பாகூர் : ஏம்பலம் தொகுதி பயனாளிகளுக்கு, ஒரு கோடியே 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., வழங்கினார்.ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கம் கமலா முருகையன் திருமண நிலையத்தில் நடந்தது. லட்சுமிகாந்தன் எம். எல். ஏ., குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமர் மந்திரி கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 77 பயனாளிகளுக்கு தல 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம், 92.40 லட்சம் ரூபாய்க்கான பணி ஆணைகளை வழங்கினார். இதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் திருமண உதவித்தொகையாக 27 நபர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் 27 லட்சம் ரூபாயிற்கான ஆணை, தொடர் நோய் குணப்படுத்த மாதாந்திர நிதி உதவியாக 18 நபர்களுக்கு அடையாள அட்டை, சமூக நலத்துறை மூலம் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறும் அடையாள அட்டைகளை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை